அச்சன் கோவில் அரசே ஹரிஹர சுதனே பஜனை பாடல்..
சுவாமியே சரணம் ஐயா தர்ம சாஸ்தாவே வரணும் ஐயா
நின் பாதமலர் அடி பணிந்தோம்
உந்தன் தரிசனம் தரணும் ஐயா
அச்சன் கோவில் அரசே ஹரிஹர சுதனே(2)
ஆரியங்கா ஐயனே சரணம் சரணம்
குளத்தூர் பாலா சர்வ குணசீலா(2)
குறை பொறுப்பாயே சரணம் சரணம்
எரிமேலி சாஸ்தா வாவரின் தோழா(2)
வில்லாளி வீரனே சரணம் சரணம்
பம்பையின் பாலா பந்தள ராஜா(2)
பாவ வினை தீர்ப்பாய் சரணம் சரணம்
சபரிகிரீசா சாந்த சொரூபா
நெய்யபி சேகரே சரணம் சரணம்
காந்தமலை ஜோதியே காருண்ய மூர்த்தியே(2)
கற்பூர ஜோதியே சரணம் சரணம்
சுவாமியே சரணம் ஐயா தர்ம சாஸ்தாவே வரணும் ஐயா
நின் பாதமலர் அடி பணிந்தோம்
உந்தன் தரிசனம் தரணும் ஐயா
Ayyappan Bhajan Songs

Post a comment