பொன்னம்பல மேடு - ஜோதி சொரூமாக காட்சி
ஐயப்பன் ஜோதியாய் இருக்கும் இடம்தான் இந்த பொன்னம்பல மேடு. இங்கு கண்ணுக்குத் தெரியாத பொற்கோயில் இருப்பதாகவும், இங்கு சாஸ்தா தியானத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. பொன் என்றால் தங்கம்; அம்பலம் என்றால் கோயில்; மேடு என்றால் மலை. பரசுராமர், இங்கு ஐயப்பனைக் கற்சிலையாக வடித்து ஆவாஹனம் செய்து பூமிக்கடியில் வைத்ததாக புராணக் கதைகள் கூறுகின்றன.
சாஸ்தா சிலையை ஆவாஹனம் செய்யும்போது, பரசுராமர் பாடிய பாடல்தான் லோகவீரம் ஸ்லோகம். அதனால், இங்கே லோகவீரம் ஸ்லோகம் சொல்லி நாம் எது வேண்டினாலும், அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
Ponnambalamedu

Post a comment