நிலவின் ஒளி வீசும் பஜனை பாடல்..
நிலவின் ஒளி வீசும் உன் ஆடை நீல வானம் ஐயா
உலகில் அனைவரையும் ஒன்றாக்கும் உந்தன் நாமம் ஐயா..
மலைகள் ஏறி வந்தோம் ஐயப்பா மனம் இரங்காயோ
அலையும் மனதினிலே எனக்கு நீ அமைதி தாராயோ..
நியமம் ஒன்றறியேன் நின் அடியார் நிழலில் நின்றறியேன்
கயவன் நான் எனினும் எனக்கு நீ கருணை செய்வாயோ..
மீண்டும் இந்திரனை விண்ணவரின் வேந்தனாக்கி வைத்தாய்
வேண்டும் பொழுதெல்லாம் என் முன்னே வில்லுடன் வாராயோ..
மதுர மதிவதனா ஐயப்பா மதன மோஹனனே
வணங்கும் குருமுனிவன் தன மொழியால் மகிழும் சிவமணியேன்..
நிலவின் ஒளி வீசும் உன் ஆடை நீல வானம் ஐயா
உலகில் அனைவரையும் ஒன்றாக்கும் உந்தன் நாமம் ஐயா..
Ayyappan Bhajan Songs
Post a comment