புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பஜனை பாடல்..
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே - (2) வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே(2)
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே(2) தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்(2) திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்(2) பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
Swamiye Saranam Ayyappa!