அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து பஜனை பாடல்..
அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து ஆதரிப்பாய் ஐயப்பா தெரிந்தும் தெரியாமல் செய்த பிழை பொறுத்து தரிசனம் தா ஐயப்பா - ஐயப்பா தரிசனம் தா ஐயப்பா
நதியில் நீராடி கதியே உனை வேண்டி சரணம் பாடுவேன் ஐயப்பா நாங்கள் தெரிந்தும் தெரியாமல் செய்த பிழை பொறுத்து தரிசனம் தா ஐயப்பா - ஐயப்பா தரிசனம் தா ஐயப்பா
ஆணவம் நீக்கி அன்பின் கடைபிடித்து காண வந்தோம் ஐயப்பா இந்த ஏழை நிலை கண்டு எங்களை காத்திட எழுந்தருள் வா ஐயப்பா - ஐயப்பா எழுந்தருள் வா ஐயப்பா
தானம் தர்மங்கள் ஆன மட்டும் செய்து வேண்டுவோம் ஐயப்பா உன் திருவடி தொழுவேன் எழுந்தருள் வா ஐயப்பா - ஐயப்பா எழுந்தருள் வா ஐயப்பா
அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து ஆதரிப்பாய் ஐயப்பா தெரிந்தும் தெரியாமல் செய்த பிழை பொறுத்து தரிசனம் தா ஐயப்பா - ஐயப்பா தரிசனம் தா ஐயப்பா
Swamiye Saranam Ayyappa!