சாமி சரணம் என்றால் மன சாந்தி பஜனை பாடல்..
சாமி சரணம் என்றால் மன சாந்தி தோன்றுதையா (Chorus) சாமி நீரே அல்லால் வேறு கதியும் இல்லை ஐயா (Chorus)
இருமுடி சுமந்தோம் பெருவழி நடந்தோம் ஸ்வாமி சரணம் ஐயப்பா (Chorus) எங்கள் இருவினை தீர்ப்பாய் ஹரிஹர சுதானே சரணம் சரணம் ஐயப்பா (Chorus)
என் மனதினில் இல்லை பேதம் இங்கு யாவும் உனது ரூபம்(Chorus) என்றும் சரணம் சொல்வதே வேதம் நம்மை சேர்க்கும் ஐயன் பாதம்(Chorus)
சரணங்கள் சொல்வோம் மரணத்தை வெல்வோம் ஸ்வாமி சரணம் ஐயப்பா (Chorus) எங்கள் சத்குருநாதா ஜெய குருநாதா சரணம் சரணம் ஐயப்பா (Chorus)
நெய் அபிஷேகமும் செய்தே எங்கள் நெஞ்சம் குளிருகின்றோம்(Chorus) அந்த பதினெட்டு படிகள் கடந்தே எங்கள் பாவத்தை தீர்க்கின்றோம்(Chorus)
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் ஸ்வாமி சரணம் ஐயப்பா (Chorus) அந்த கரிமலை வாசா காத்திட வருவாய் சரணம் சரணம் ஐயப்பா! (Chorus)
Swamiye Saranam Ayyappa!