சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

சாமி சரணம் என்றால் மன சாந்தி பஜனை பாடல்

Swamy Saranam Endral Manashanthi Lyrics In Tamil

சாமி சரணம் என்றால் மன சாந்தி தோன்றுதையா — ஐயப்பனின் நாமத்தை உச்சரிக்கும் போதே மனக்குழப்பங்கள் தீர்ந்து சாந்தி பிறக்கும் என்பதை விளக்கும் பஜனை.

தமிழ் பாடல் வரிகள்

சாமி சரணம் என்றால் மன சாந்தி பஜனை பாடல்..

சாமி சரணம் என்றால் மன சாந்தி தோன்றுதையா (Chorus) சாமி நீரே அல்லால் வேறு கதியும் இல்லை ஐயா (Chorus)

இருமுடி சுமந்தோம் பெருவழி நடந்தோம் ஸ்வாமி சரணம் ஐயப்பா (Chorus) எங்கள் இருவினை தீர்ப்பாய் ஹரிஹர சுதானே சரணம் சரணம் ஐயப்பா (Chorus)

என் மனதினில் இல்லை பேதம் இங்கு யாவும் உனது ரூபம்(Chorus) என்றும் சரணம் சொல்வதே வேதம் நம்மை சேர்க்கும் ஐயன் பாதம்(Chorus)

சரணங்கள் சொல்வோம் மரணத்தை வெல்வோம் ஸ்வாமி சரணம் ஐயப்பா (Chorus) எங்கள் சத்குருநாதா ஜெய குருநாதா சரணம் சரணம் ஐயப்பா (Chorus)

நெய் அபிஷேகமும் செய்தே எங்கள் நெஞ்சம் குளிருகின்றோம்(Chorus) அந்த பதினெட்டு படிகள் கடந்தே எங்கள் பாவத்தை தீர்க்கின்றோம்(Chorus)

கரிமலை ஏற்றம் கடினம் கடினம் ஸ்வாமி சரணம் ஐயப்பா (Chorus) அந்த கரிமலை வாசா காத்திட வருவாய் சரணம் சரணம் ஐயப்பா! (Chorus)

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →