அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்..
அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் ஐயப்பன் (2)
எங்கும் இருப்பாயே ஐயப்பா…. இங்கு வருவாயோ(2)
அன்புடனே ஆதரித்து அருளும் ஐயப்பா, ஐயப்பா...
அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் ஐயப்பன் (2)
இருமுடி தாங்கி வரோம் ஐயப்பா பெருவலி தாண்டி வரோம்(2)
தேடி வரும் ஏனழ என் மேல் கருணை செய்யப்பா, ஐயப்பா.
அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்கும் இருப்பார் ஐயப்பன் (2)
பெரிதான காட்டுக்குள்ளே புகுந்துன்னை ஒருமுறை பார்க்க வரோம்(2)
பார்க்க வரும் ஏழை என் மேல் கருணை செய்யப்பா, ஐயப்பா...
அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் ஐயப்பன் (2)
சோதனை செய்யாதே, ஐயப்பா, வேதனை செய்யாதே(2)
பந்தளேசன் பாதுகாத்த பாலகா நீ வா, ஐயப்பா
அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் ஐயப்பன் (2)