ஓம் சுவாமியே - சரணம் ஐயப்பா
பம்பா வாசனே - சரணம் ஐயப்பா
ஓம் சாத்தியமான பொண்ணுபதினெட்டு படிகளே - சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே - சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே - சரணம் ஐயப்பா
பகவான் ஐயப்பனை நாம் காண கார்த்திகை ஒன்று முதல் நோன்பிருந்தோம்
காலையும் மாலையும் நீராடி கழுத்தினில் ருத்ராட்சம் மாலையிட்டு (Chorus)
அச்சங்கோவில் அரசனை நாம் காண ஆரியங்கா ஐயாவை நாம் காண
குளத்தூர் பாலனை நாம் காண குழந்தை மணிகண்டனை நாம் காண (Chorus)
எருமேலி நாதனை நாம் காண எங்கள் குலதெய்வத்தை நாம் காண
பம்பா வாசனை நாம் காண பந்தள ராஜாவை நாம் காண (Chorus)
நீலிமலை வாசனை நாம் காண நித்ய பிரம்மச்சாரியரை நாம் காண
சபரிபீடத்தை நாம் காண சரங்குத்தியாழினை நாம் காண (Chorus)
அப்பாச்சி மேடதை நாம் காண இப்பாச்சி குழியதை நாம் காண
இருமுடி பிரியனை நாம் காண ஈசனின் மகனை நாம் காண (Chorus)
கருப்பசாமியை நாம் காண கடுத்தசாமியை நாம் காண
பதினெட்டு படிகளை நாம் காண பகவானின் சன்னிதானம் நாம் காண (Chorus)
நெய்அபிஷேகத்தை நாம் காண நெல்லையப்பர் மகனை நாம் காண
மாளிகைபுரத்தம்மை நாம் காண மஞ்சமாதா தேவியை நாம் காண (Chorus)
ஐங்கரன் தம்பியை நாம் காண ஆறுமுகன் சோதரனை நாம் காண
அன்னதான பிரபுவை நாம் காண ஆதரிக்கும் தெய்வத்தை நாம் காண (Chorus)
காந்தமலை ஜோதியை நாம் காண காருண்யமூர்த்தியை நாம் காண
மகரமாதா விளக்கை நாம் காண மணிகண்ட பிரபுவை நாம் காண (Chorus)
காலையும் மாலையும் நீராடி கழுத்தினில் ருத்ராட்சம் மாலையிட்டு
பகவான் ஐயப்பனை நாம் காண கார்த்திகை ஒன்று முதல் நோன்பிருந்தோம் (Chorus)
Post a comment