அப்படி இப்படி ஆடி பாடி பஜனை பாடல்..
அப்படி இப்படி ஆடி பாடி ஆனந்தம் கொண்டு
எப்படியும் சபரிமலை சேர்ந்திடுவோமே
நாளு பத்து ஒரு நாளாய் விரதமிருந்து
அந்த நாராயணன் புத்திரனை காணுவோமென்று
இன்பமுடன் கட்டெடுத்து எருமேலி சேர்த்து
பண்புடனே வேட்டையாடி கோட்டை கடந்து
பேரூர்தோடு அரியக்குடி காளைகட்டியாம்
சீரான இத்தாவளங்கள் நேராக கடந்து
அழுதையிலே நீராடி கல்லுமேடுத்து
பழுதின்றி கல்லிடும் குன்றில் பக்தியாய் சேர்த்து
இஞ்சிப்பாறை உடும்பாறை முக்குழியுடனே
மரவெட்டி மடுக்கை புதுச்சேரி தாவளாம்
கரிவலத்தோடு தன்னை கடந்து நடந்தும் செல்கின்றோம்
கரிமலையின் பகவதிக்கு கற்பூரம் செலுத்தி
கரிமலையின் ஏற்ற இறக்கம் யாவும் கடந்து
கருணாமூர்த்தியை காணுவோமென்று நாங்களும் செல்கின்றோம்
பம்பை நதியில் நீராடி பந்தியும் செய்து
உனை பக்தியோடு பாடியாடி பரவசம் கொண்டு
நீலிமலை ஏற்றமதை நெஞ்சிலே கொண்டு
நீங்கா உந்தன் நாமமதை துணையென கொண்டு
அப்பாச்சிமேடு தானதர்மம் தப்பாது நடத்தி
அப்பாலுள்ள சபரிபீடம் அதனை வணங்கி
அசுவத்தம் என்ற சரங்குத்தியில் இருந்து
அன்பு கதை சரத்தையிட்டு உன்னை வணங்கி
பதினெட்டு படிகள் கண்டு பரவசம் கொண்டு
பக்தியோடு கண்ணில் ஒற்றி படிகள் கடந்து
சன்னதியில் வந்து உன்னை தரிசனம் செய்வோம்
சாமி சரணம் சபரிகிரி சாஸ்தாவே சரணம்.
