அரஹரோஹரா முருகா அரஹரோஹரா பஜனை பாடல்..
அரஹரோஹரா முருகா அரஹரோஹரா
அரஹரோஹரா சண்முகா அரஹரோஹரா
பாசிபடர்ந்த மலை பங்குனி தேர் ஓடும் மலை
ஊசி படர்ந்த மலை ருத்ராட்சம் காய்க்கும் மலை(chorus)
மலைக்குள் மலைநடுவே மலையாள தேசமப்ப
அந்த மலையாள தேசம் விட்டு மயிலேறி வருவாய் இப்போ(chorus)
அந்தமலைக் குயர்ந்தமலை ஆகும் பழனி மலை
எந்த மலையைக் கண்டு ஏறுவேன் நான் சன்னதி முன்(chorus)
ஏறாத மலைதனிலே ஏறி நின்று தத்தளிக்க
பாராமல் கைகொடுப்பாய் பழனி மலை வேலவனே(chorus)
அரஹரோஹரா முருகா அரஹரோஹரா
அரஹரோஹரா சண்முகா அரஹரோஹரா
Ayyappan Bhajan Songs
