அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து பஜனை பாடல்..
அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து
ஆதரிப்பாய் ஐயப்பா
தெரிந்தும் தெரியாமல் செய்த பிழை பொறுத்து
தரிசனம் தா ஐயப்பா - ஐயப்பா தரிசனம் தா ஐயப்பா
நதியில் நீராடி கதியே உனை வேண்டி
சரணம் பாடுவேன் ஐயப்பா
நாங்கள் தெரிந்தும் தெரியாமல் செய்த பிழை பொறுத்து
தரிசனம் தா ஐயப்பா - ஐயப்பா தரிசனம் தா ஐயப்பா
ஆணவம் நீக்கி அன்பின் கடைபிடித்து
காண வந்தோம் ஐயப்பா
இந்த ஏழை நிலை கண்டு எங்களை காத்திட
எழுந்தருள் வா ஐயப்பா - ஐயப்பா எழுந்தருள் வா ஐயப்பா
தானம் தர்மங்கள் ஆன மட்டும்
செய்து வேண்டுவோம் ஐயப்பா
உன் திருவடி தொழுவேன்
எழுந்தருள் வா ஐயப்பா - ஐயப்பா எழுந்தருள் வா ஐயப்பா
அறிந்தும் அறியாமல் செய்த பிழை பொறுத்து
ஆதரிப்பாய் ஐயப்பா
தெரிந்தும் தெரியாமல் செய்த பிழை பொறுத்து
தரிசனம் தா ஐயப்பா - ஐயப்பா தரிசனம் தா ஐயப்பா