ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணம் பஜனை பாடல்..
ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணம்
தர்மசாஸ்தாவே சரணம் என்றே ஆனந்தமாய் பாடிடுவோம்
பம்பாநதி கரையினிலே பக்குவமாய் நீராடி
பதினெட்டு படியேறி பக்தியுடன் கூப்பிடுவோம்(Chorus )
தங்கநிற திருமேனி தாங்கி நிற்கும் சாஸ்தாவே(2)
தலைமீது கைகூப்பி தன்மயமாய் வணங்கிடுவோம்(Chorus )
காந்தமலை ஜோதி என்றும் கற்பூர ஜோதி என்றும் (2)
கலியுகத்து கண்கண்ட தெய்வமென்று கூப்பிடுவோம்(Chorus)
ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணம்
தர்மசாஸ்தாவே சரணம் என்றே ஆனந்தமாய் பாடிடுவோம்(Chorus )
Ayyappan Bhajan Songs
