கருணை என்னும் தேரினிலே பஜனை பாடல்..
நீலிமலையில் இருபவராம் நீங்கா இன்பம் தருபவராம்
காலச்சிறகினை வென்றவராம் கலியுகவரதனாய் வந்தவராம்
கருணை என்னும் தேரினிலே கலைகள் மின்னும் மலையினிலே
காட்சி தந்தான் சபரியிலே ஆட்சி செய்தான் பாரினிலே
வாடிடும் ஏழைகள் ஓடிவர வள்ளலாம் ஐயனை நாடிவர
தேடிடும் ஞானம் கூடிவர தெய்வமே இங்கு காட்சிதர
காலெடுத்தேன் உந்தன் மலை நடக்க தலையெடுத்தேன் இருமுடி சுமக்க
கையெடுத்தேன் உன்னை வேண்டி நிற்க நாவெடுத்தேன் உந்தன் பேர் உரைக்க
மாமலை ஏறிப் போகையிலே மனதினில் இன்பம் தோன்றுதையா
சபரிக் காட்டில் நடக்கையிலே சாந்தி நிறைந்து தோன்றுதையா
பதினெட்டு படிகள் தாண்டையிலே பக்தியின் எல்லையை தாண்டுதையா
பந்தளக் குழந்தையை பார்க்கையிலே சிந்தையின் சொர்க்கம் தோன்றுதையா
ஐயனை மனதினில் நினைக்கையிலே ஐயம் எல்லாம் இங்கு தீருதையா
மகர ஜோதியை காண்கையிலே மரணத்தின் பயமும் தீருதையா
நீலிமலையில் இருபவராம் நீங்கா இன்பம் தருபவராம்
காலச்சிறகினை வென்றவராம் கலியுகவரதனாய் வந்தவராம்..
