காவி வேட்டி கட்டிக்கிட்டு பஜனை பாடல்..
காவி வேட்டி கட்டிக்கிட்டு கழுத்தில் மாலை போட்டுக்கிட்டு
சாமி சரணம் சொல்லிக்கிட்டு வந்தோமப்பா ஐயப்பா
சாமி சரணம் சொல்லிக்கிட்டு சரண கோஷம் போட்டுக்கிட்டு
சபரிமலை பாதையிலே ஏறி வந்தோம் ஐயப்பா(chorus)
பேரூரு தோடு தாண்டி ஆருரு மைந்தன் உன்னை
பெருமையாக பேசிக்கொண்டே வந்தோம் அப்பா ஐயப்பா(chorus)
காளைகட்டி வச்ச இடம் ஆளக்கட்டி வச்சதப்பா
கண்ணுக்குள்ளே அந்தக்கோலம் வந்ததப்பா ஐயப்பா(chorus)
அழுதாவின் ஏற்றமெல்லாம் ஏற்றம் தரும் ஏற்றமப்பா
ஆண்டாண்டு கஷ்டமெல்லாம் தீர்த்துவிடும் ஐயப்பா(chorus)
அழுதாவில் நீராடி சாயமெல்லாம் போனதப்பா
அய்யன் உனது நெனப்பு மட்டும் உள்ளத்துல நெறஞ்சதப்பா(chorus)
சொல்லில் இட்ட சரணமெல்லாம் கல்லில் இட்ட குன்றாக
சோலைவனம் கடந்ததப்பா சுகமாச்சு ஐயப்பா(chorus)
நெஞ்சமெனும் கடும்பாறை இஞ்சிப்பாறை உடும்பாறை
வந்தவுடன் இளகிப்போக இதமாச்சு ஐயப்பா(chorus)
ஹரியாக பாதியாகி ஹரனாக பாதியாகி
உருவான உன்னைக்கான ஓடி வந்தோம் ஐயப்பா(chorus)
கரியோடி சரணம் சொல்லும் மலையேறி மலையேறி
காலார பாவமெல்லாம் தொலைச்சுப்புட்டோம் ஐயப்பா(chorus)
சிறியானை பெரியானை வட்டமெல்லாம் காட்டுக்குள்ள
அழியாத நெஞ்சுக்குள்ள ஐயன் பற்றி சொல்லுதப்பா (chorus)
பாவமெல்லாம் கோவத்துல பாம்பை நதி தானழிக்க
பட்ட மனம் துளிர்ததப்பா பந்தளத்து ஐயப்பா(chorus)
பாம்பா கணபதிக்கு வந்தனத்த சொல்லிப்புட்டு
தெம்பாக ஏறுத்தப்பா சாமியெல்லாம் நீலிமலை(chorus)
ஆலகால உள்ளமெல்லாம் நீலிமலை ஏறயிலே
அமுதமாக மாறுதப்ப ஆனந்தனே ஐயப்பா(chorus)
ஆனந்த சித்தன் உன்னை ஆறு மூன்று படியேறி
அபிஷேக கோலத்துல கண்டோமப்பா ஐயப்பா(chorus)
மேனியிலே நெய்யுருக ஜோதியிலே மெய்யுருக
மேலான சித்திநிலை ஏறுத்தப்ப யோகத்துள்ள(chorus)
சாமியப்பா சரணமப்பா சரணமப்பா சாமியப்பா
சரணகோஷம் கேக்குதப்பா சபரிமலை ஐயப்பா(chorus)
காவி வேட்டி கட்டிக்கிட்டு கழுத்தில் மாலை போட்டுக்கிட்டு
சாமி சரணம் சொல்லிக்கிட்டு வந்தோமப்பா ஐயப்பா
