மங்களங்கள் தருபவனே பஜனை பாடல்..
சர்வமங்கள தாயகனே சரணம் ஐயப்பா
எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயா தர்ம சாஸ்தாவே வரணும் ஐயா
நின் பாதமலர் அடி பணிந்தோம்
உந்தன் தரிசனம் தரணும் ஐயா
மங்களங்கள் தருபவனே
வீர, மணிகண்ட மூர்த்தியே வா
மாலையும் சூடி வந்தோம்
சபரி, மாமலை ஏறி வந்தோம்
பந்தளத்து குமரனே வா
ஐயப்பா, உந்தன் பாதம் சரணடைந்தோம்
பந்த பாசம் விட்டு வந்தோம்
ஐயப்பா, சொந்தம் என்று உன்னிடம் வந்தோம்
இருமுடி ஏந்தி வந்தோம்
ஐயப்பா, திருவடி தேடி வந்தோம்
கரிமலை தாண்டி வந்தோம்
உந்தன், திருமுகம் காண வந்தோம்
சரணங்கள் போட்டு வந்தோம்
ஐயப்பா, உன் காதில் கேட்கவில்லையோ
கற்பூரம் ஏற்றி வந்தோம்
பாலா, உன் மனமும் இறங்கவில்லையா
சோதனை நீ செய்தாலும்
ஐயனே உன், பாதங்களை விடமாட்டோம்
எங்கள் வேதனையை தீர்க்கும் ஸ்தலம்
சபரி, மலையென நாங்கள் உணர்ந்தோம்
வில்லும் அம்பும் கையினில் கொண்டு
ஐயப்பா, வினைகளை களைந்திட வா
வில்லாளி வீரனே வா
எங்கள், வீரமணிகண்டனே வா
உன் நாமம் அமுதமப்பா
ஐயப்பா, பொன்னம்பல தரசனப்பா
பதினெட்டாம் படி தலைவா
புனித, காந்தமலை ஜோதியப்பா
சுவாமியே சரணம் ஐயா தர்ம சாஸ்தாவே வரணும் ஐயா
நின் பாதமலர் அடி பணிந்தோம்
உந்தன் தரிசனம் தரணும் ஐயா
