பொய் இன்றி மெய்யோடு பஜனை பாடல்..
பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்
ஐயப்பா சுவாமி ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா..
அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் ஐயப்பன் -உன்னை புகழோடு வாழவைப்பான் ஐயப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு அவனைக் காண – தேவை பண்பாடு
ஐயப்பா சுவாமி ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா..
பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழவைப்பான் ஐயப்பன் -நல்ல பெயரோடு வாழவைப்பான் ஐயப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள் அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான்
ஐயப்பா சுவாமி ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா..
பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்
ஐயப்பா சுவாமி ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா..
Ayyappan Bhajan Songs
Post a comment