சாஸ்தா வரவைக் கேளாய் பஜனை பாடல்..
சாஸ்தா வரவைக் கேளாய்
சபரிகிரி சாஸ்தா வரவை கேளாய்
சாஸ்தா வருகிறதை தைர்யமாக பார்க்க வேண்டும்
பார்த்தவர்கள் கேட்டவர்கள் கூப்பிட்டால் அவர் வருவார்
எட்டவதாரங்கள் உண்டு எட்டு ஸ்வரூபங்கள் உண்டு
அஷ்ட கர்மங்களில் இவர் அறியாததொன்றும் இல்லை
கருப்பன் என்ற ஒரு மாடன் கார்யமந்திரி சுடலை
கறுத்தமேகம் போலே வாரான் கையில் கொடுவாளும் ஏந்தி
முன்னடி மாடன் கையில் வெட்டுக்கத்தி எட்டுச்சாணில்
ஓங்கார பேய்களை அவன் நொறுக்கி அடக்கி வாரான்
முன்சுடலைமாடன் வாரான் மூர்க்கதெய்வம் ஆகும் இவன்
வஞ்சனை சூனியங்களை வைத்த பேரை வைக்க மாட்டான்
பனைகள் போலே ரெண்டு கால்கள் பாறைகள் போல் ரெண்டு முட்டு
தனி சிலம்பம் சல்லடம் சலங்கை குலுங்கிடவே
பூதத்தான் முதலான பூதப் படைகளுடன்
வேதத்தால் ஸ்துதி செய்யும் வேதியர் சபை நடுவே
சாஸ்தா வரவைக் கேளாய்
சபரிகிரி சாஸ்தா வரவை கேளாய்
Post a comment