காரும் எங்கள் போகும் சக்தி பஜனை பாடல்..
சுவாமி சரணம் சுவாமி சரணம்
சுவாமி சரணம் ஐயப்பா(2)
காரும் எங்கள் போகும் சக்தி
வாழும் சபரி மலையப்பா
பாரும் கண்ணால் தீரும் வினையை
போக்கும் சுவாமி ஐயப்பா
மண்டலத்தில் பூஜை செய்ய
தொண்டு செய்தோம் ஐயப்பா
தொண்டனாக ஜோதி கண்டேன்
கண்டன் பாலன் ஐயப்பா
காவி தாடி மாலை சூடி
காண வந்தோம் ஐயப்பா
மேலும் எங்கள் வாழ்வு ஓங்க
ஓடி வந்தோம் ஐயப்பா
ஐயன் அருளே ஐயப்பா
ஆண்டவன் நீயே ஐயப்பா
வில்லாளி வீரா ஐயப்பா
வீரமணிகண்டா ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
அருள் தரணும் தரணும் ஐயப்பா
Ayyappan Bhajan Songs
