துளசி மணி மாலைகட்டி பஜனை பாடல்..
துளசி மணி மாலைகட்டி இருமுடியை தலையில் ஏந்தி
சபரி நோக்கி நடையை போடு கன்னிசாமி
அங்கே சாஸ்தாவின் அருள் கிடைக்கும் கன்னிசாமி
எரிமேலி பேட்டையிலே கரிமலையில் நடக்கையிலே
எத்தனையோ இன்பமுண்டு கன்னிசாமி
நீயும் வந்து பார்த்து வரத்தை கேளு கன்னிசாமி
பாட்டு பாடி பஜனை பாடி பம்பாநதி தீர்த்தமாடி
காட்டுக்குள்ளே குடியிருப்போம் கன்னிசாமி
அங்கே வேட்டு வச்சு வழி நடப்போம் கன்னிசாமி
மலை அதிர சரணம் போட்டு மனமுருக பாட்டு பாடி
அலை அலையாய் நடந்து வந்தோம் கன்னிசாமி
அங்கே ஆனந்தமாய் ஜோதி பார்ப்போம் கன்னிசாமி
துளசி மணி மாலைகட்டி இருமுடியை தலையில் ஏந்தி
சபரி நோக்கி நடையை போடு கன்னிசாமி
அங்கே சாஸ்தாவின் அருள் கிடைக்கும் கன்னிசாமி
Ayyappan Bhajan Songs
