சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் — எங்கும் நிறைந்த பரம்பொருளாய் விளங்கும் ஸ்ரீ ஐயப்பனின் சர்வ வியாபகத்தைப் போற்றும் பஜனைப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்..

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் ஐயப்பன் (2)

எங்கும் இருப்பாயே ஐயப்பா…. இங்கு வருவாயோ(2) அன்புடனே ஆதரித்து அருளும் ஐயப்பா, ஐயப்பா...

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் ஐயப்பன் (2)

இருமுடி தாங்கி வரோம் ஐயப்பா பெருவலி தாண்டி வரோம்(2) தேடி வரும் ஏனழ என் மேல் கருணை செய்யப்பா, ஐயப்பா.

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்கும் இருப்பார் ஐயப்பன் (2)

பெரிதான காட்டுக்குள்ளே புகுந்துன்னை ஒருமுறை பார்க்க வரோம்(2) பார்க்க வரும் ஏழை என் மேல் கருணை செய்யப்பா, ஐயப்பா...

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் ஐயப்பன் (2)

சோதனை செய்யாதே, ஐயப்பா, வேதனை செய்யாதே(2) பந்தளேசன் பாதுகாத்த பாலகா நீ வா, ஐயப்பா

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் ஐயப்பன் (2)

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →