சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பொய் இன்றி மெய்யோடு பஜனை பாடல்

Poi indri meiyodu lyrics in tamil

பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் — பொய்மையின்றி தூய உள்ளத்தோடு நெய் தேங்காய் எடுத்துச் சென்றால் ஐயப்பனின் அருளைப் பெறலாம் என்பதை உணர்த்தும் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

பொய் இன்றி மெய்யோடு பஜனை பாடல்..

பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் ஐயப்பா சுவாமி ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா..

அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான் ஐயப்பன் -உன்னை புகழோடு வாழவைப்பான் ஐயப்பன் இருப்பது காடு வணங்குது நாடு அவனைக் காண – தேவை பண்பாடு ஐயப்பா சுவாமி ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா..

பூஜைகள் போடு தூய அன்போடு பெயரோடு வாழவைப்பான் ஐயப்பன் -நல்ல பெயரோடு வாழவைப்பான் ஐயப்பன் அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள் அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான் ஐயப்பா சுவாமி ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா..

பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் ஐயப்பா சுவாமி ஐயப்பா.. ஐயப்பா சரணம் ஐயப்பா..

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →