சமயபுரத்தாளே மாரியம்மா பஜனை பாடல்..
சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மா சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் - அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம் துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா - அம்மா தூயவனே என் தாயே மாரியம்மா
பட்டு பீதாம்பரத்தில தாவணியும் - உனக்கு பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம் எட்டு திசைகளையும் ஆண்டவளே - அம்மா ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா
கத்தி கதறுகிறோம் கேட்கலையோ - தாயே கல்லேதான் உன் மனமும் கரையலையோ உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பிலே - எங்கள் உமையவளே தாயே மாரியம்மா
காலிற் சலங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா பூவாடை வீசுதம்மா பூமகளே உனக்கு பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா
சுவாமியே சரணம் ஐயப்பா!