சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
பக்திப் பாடல்

அரஹரோஹரா முருகா அரஹரோஹரா பஜனை பாடல்

Araharohara muruga araharohara lyrics in tamil

அரஹரோஹரா முருகா அரஹரோஹரா — ஐயப்பனின் திருத்தம்பியான கலியுக வரதன் ஸ்ரீ முருகப்பெருமானின் வீரத்தையும் கருணையையும் போற்றும் வெற்றிப் பஜனைப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

அரஹரோஹரா முருகா அரஹரோஹரா பஜனை பாடல்..

அரஹரோஹரா முருகா அரஹரோஹரா அரஹரோஹரா சண்முகா அரஹரோஹரா

பாசிபடர்ந்த மலை பங்குனி தேர் ஓடும் மலை ஊசி படர்ந்த மலை ருத்ராட்சம் காய்க்கும் மலை(chorus)

மலைக்குள் மலைநடுவே மலையாள தேசமப்ப அந்த மலையாள தேசம் விட்டு மயிலேறி வருவாய் இப்போ(chorus)

அந்தமலைக் குயர்ந்தமலை ஆகும் பழனி மலை எந்த மலையைக் கண்டு ஏறுவேன் நான் சன்னதி முன்(chorus)

ஏறாத மலைதனிலே ஏறி நின்று தத்தளிக்க பாராமல் கைகொடுப்பாய் பழனி மலை வேலவனே(chorus)

அரஹரோஹரா முருகா அரஹரோஹரா அரஹரோஹரா சண்முகா அரஹரோஹரா

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்