சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

வட்ட நல்ல பொட்டு வச்சு பஜனை பாடல்

Vatta Nalla Pottu Vachu Lyrics in Tamil

வட்ட நல்ல பொட்டு வச்சு சந்தனத்தை அள்ளிப் பூசி — திருநீறும் சந்தனமும் அணிந்து ஐயப்பனின் எழிற்கோலத்தைக் கொண்டாடும் கிராமிய பக்திப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

வட்ட நல்ல பொட்டு வச்சு பஜனை பாடல்..

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே வன்புலி வாகனனே ஐயப்பா உன்ன வந்து நாங்க பார்க்கப் போறோம் ஐயப்பா

எத்தனையோ மலை இருக்க அத்தனையும் தான் கடந்து சபரிமலை ஆண்டவரே ஐயப்பா சந்நியாசியை நின்றவரே மெய்யப்பா

உச்சி மலைதனிலே ஒய்யாரமாய் அமர்ந்தவரே(இருப்பவரே) பச்சைமால் வடிவழகா ஐயப்பா பரதேசியாய் நாங்க வாரோம் ஐயப்பா

கண்ணனும் சிவனும் சேர கைதனிலே பிறந்தவரே ஐயப்பா தெய்வமான ஐயப்பா காந்தமலை ஜோதியான மெய்யப்பா

எரிமேலி பேட்டைதுள்ளி பம்பையிலே தீர்த்தமாடி நீலிமலை ஏற்றத்திலே ஐயப்பா நிக்க வச்சு சொக்க வைப்பாய் ஐயப்பா எங்களை நிக்க வச்சு சொக்க வைப்பாய் ஐயப்பா

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே வன்புலி வாகனனே ஐயப்பா உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →