கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு பாடல் வரிகள்..
கன்னிமூல கணபதிய வேண்டிக்கிட்டு - நாங்க
கார்த்திக முதல் தேதி மாலை ஈட்டோம்(2)
ஐயப்பா-ஐயப்பா என்றே சொல்லி- நாங்க
ஆறு வாரம் தானே நோம்பும் இருந்தோம்(2)
எங்க குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிகிட்டு
இருமுடியை சுமந்துகிட்டு வந்தோமையா (2)
ஆறு படை வீடு சென்று கந்தனையே வேண்டிக்கிட்டு
யாத்திரயாய் நடந்து வந்தோமையா
குருவாயூர் கோவில் முதல் கன்யாகுமரி வரை
தரிசனமே செய்துவிட்டு வந்தோமையா (2)
எரிமலை பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு
பேரூர் தோட்டில் பொறி போட்டு வந்தோமையா (2)
காளை கட்டி அஞ்சல் வந்து அழுதாமலை ஏறிக்கிட்டு
கரிமலையின் உச்சியிலே வந்தோமையா (2)
பம்பையிலே குளிச்சிப்புட்டு பாவங்களை தொலச்சிப்புட்டு (2)
நீலீமலை ஏறிக்கிட்டு வந்தோமையா
பதினெட்டாம் படி தாண்டி பகவானே உனை வேண்டி
கற்பூர ஜோதிதனை கண்டோமையா (2)
மகர ஜோதியை கண்டு மனமார சரணம் போட்டு
மணிகண்டா உன் மகிமை அறிந்தோமையா (2)
சாமியே சரணம் ஐயப்பா சரணம்
சாமியே சரணம் சரணம் ஐயா..
சாமியே சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சரணம் ஐயா..
சாமியே…ஐயப்போ…(4)
சாமி சரணம் …ஐயப்ப சரணம்…(4)
சாமியே…ஐயப்போ…(5)
சாமியே…சரணம் ஐயப்போ …
