எனக்கொரு விடை நீ தர வேண்டும் பாடல் வரிகள்..
சுவாமியே ஐயப்பா.. சுவாமியே ஐயப்பா..
எனக்கொரு விடை நீ தர வேண்டும் உனக்கொரு சோதனை நாயகனே
எனக்கொரு விடை நீ தர வேண்டும் உனக்கொரு சோதனை நாயகனே..(2)
பாழும் மனதில் தினம் வாழும் மிருகம் எனும் கோபம் மிகுந்து வந்ததேன்
என் பாவம் திரண்டு நின்றதேன்..
சுவாமியே ஐயப்பா.. சுவாமியே ஐயப்பா..
இருமுடி ஏந்தி நடந்திடும் போது இருவினை திரையாய் தெரிவதென்ன
சலசலவென இசை தரும் ஒரு நதி அது பம்பையின் நீரும் சுடுவதென்ன..(2)
கோஷங்களே என் கூகுரலை தடுக்கிறதோ
சரண கோஷங்களே கூகுரலை தடுக்கிறதோ..
மலையின் காற்று எரிக்கிறது
மர இழைகள் கைக்கொட்டி சிரிக்கிறது..
சுவாமியே ஐயப்பா.. சுவாமியே ஐயப்பா..
சபரிபீடமே வந்த பின்னால் உன் சந்நிதி என்னை அழைக்கிறது
சடசடவென வரும் ஒலி அது பெருகிடும் சண்டையும் சலனத்தை நீக்கியது..(2)
மனம் திறந்தேன் பகவானே மனம் இறங்கு..(2)
பதினெட்டு படிகள் தெரிகிறது
என் கேள்விக்கு பதில் சொல்ல துடிக்கிறது..
சுவாமியே ஐயப்பா.. சுவாமியே ஐயப்பா..
ஐயனின் திருமுகம் தீபத்து ஒளியினில் ஞானத்தின் சுடரை ஜொலிக்கிறது
அவரவர் வினைகளை அவரவர் சுமப்பது அவரவர் பொருப்பென சொல்கிறது..(2)
திறந்திடுததே மனகண்கள் திறந்திடுததே..(2)
மணிகண்டன் பெருமை புரிகிறது
அவன் திருமுகன் மனதினில் பதிகிறது..
சுவாமியே ஐயப்பா.. சுவாமியே ஐயப்பா..
எனக்கொரு விடை நீ தந்தாயே உனக்கிது புதுசில்லை நாயகனே..(2)
ஆடும் மனத்தில் இனி ஞானம் கொடுத்து எனை ஆளும் கருணை அல்லவா
நீ பேசும் தெய்வம் அல்லவா..
சுவாமியே ஐயப்பா.. சுவாமியே ஐயப்பா..
சுவாமியே ஐயப்பா.. சுவாமியே ஐயப்பா..
