Skip to main content

Search Modal

Main Area

Main

போக்குவரத்து தகவல்கள்

போக்குவரத்து தகவல்கள்

சபரிமலை போக்குவரத்து தகவல்கள் - வழிகள்

தரிசன நேரம்:
காலை 4 மணியில் இருந்து, மதியம் 1.30 வரை, மாலை 4 முதல் இரவு 11 மணி வரையில் திறந்திருக்கும்.

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் அடர்ந்த காட்டு வழியாக ஆபத்தான பயணம் செய்து ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டி இருந்தது. எனவே மண்டலபூஜை-மகரவிளக்கு நடைபெறும் சமயத்தில் , மன்னரகுளஞ்சி-சாலக்கயம் சாலை வழியாக 5000 பக்தர்களே தரிசனம் செய்து வந்தனர். ஆனால் இப்போது சபரிமலைக்கு செல்ல எருமேலி, வண்டிபெரியார், சாலக்கயம் ஆகிய மூன்று பாதைகளும் சரிசெய்யப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 கோடிக்கும் மேலான பக்தர்கள் இந்த மூன்று வழிகளில் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.

1.    எருமேலி வழியாக பெரிய பாதையில் நடந்து செல்பவர்கள் அடர்ந்த காடு மற்றும் மலை வழியாக 61 கி.மீ. பயணம் செய்தால் சபரிமலையை அடையலாம்.
2.    குமுளியிலிருந்து கோட்டயம் செல்லும் வழியில் 94. கி.மீ தூரத்தில் வண்டிப்பெரியார் உள்ளது. அங்கிருந்து 12.8 கி.மீ. தூரம் சென்றால் சபரிமலையை அடையலாம்.
3.    சாலக்கயத்திலிருந்து சபரிமலை செல்வது தான் மிக எளிதான வழி. சாலக்கயத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. பம்பையிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் சபரிமலை உள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து

1. செங்கோட்டை-புனலூர்-பத்தனம்திட்டா வழி - 170 கி.மீ.
2. குமுளி-வண்டிபெரியார்-எருமேலி-பிலாப்பள்ளி - 180 கி.மீ.

சபரிமலைக்கு கோட்டயம் மற்றும் செங்கனூரிலிருந்து புனலூர் வரை ரயிலிலும், புனலூரிலிருந்து பம்பைக்கு பஸ்ஸிலும் செல்லலாம்.

சபரிமலைக்கு திருவனந்தபுரம், கொச்சி, நெடும்பாசேரி வரை விமானத்திலும், அங்கிருந்து பம்பைக்கு பஸ் மற்றும் கார் மூலமாக செல்லலாம்.

கோவை, பழநி, தென்காசி போன்ற இடங்களிலிருந்து வரும் கேரள அரசு பஸ்கள் பம்பை வரைக்கும் செல்லும். தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலிருந்து வரும் பஸ்கள் நிலக்கல் வரை மட்டும் அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு பஸ்களில் மட்டுமே செல்ல முடியும்.

சபரிமலை போக்குவரத்து தகவல்கள்

புறப்படும் இடம் சேரும் இடம் தூரம்
எருமேலி பம்பை 56 கி.மீ
கோட்டயம் எருமேலி 72 கி.மீ
கோட்டயம் பம்பை 128 கி.மீ
செங்கனூர் பம்பை 93 கி.மீ
திருவல்லா பம்பை 99 கி.மீ
எர்ணாகுளம் பம்பை (வழி) கோட்டயம் 200 கி.மீ
ஆலப்புழா பம்பை 137 கி.மீ
புனலூர் பம்பை 105 கி.மீ
பத்தனம்திட்டா பம்பை 69 கி.மீ
பந்தளம் பம்பை 84 கி.மீ
திருவனந்தபுரம் பம்பை 175 கி.மீ
எர்ணாகுளம் எருமேலி (வழி) பாளை, பொன்குன்னம் 175 கி.மீ
Aryankavu Achankovil Kulathupuzha Erumeli Pandalam Sabarimala
How to reach Sabarimala BLISSON TECHNOLOGIES
2014-2024 Ponnambala Sri Ayyappan Alayam Sengurichi. All rights reserved. Designed by ParthibanSethu.