சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அச்சன் கோவில் அரசே ஹரிஹர சுதனே பஜனை பாடல்

Achankovil Arase Harihara Suthane Lyrics in Tamil

அச்சன்கோவில் அரசே ஹரிஹர சுதனே — அச்சன்கோவில் ராஜமன்னன் பகவான் ஸ்ரீ தர்மசாஸ்தாவின் திவ்யப் பெருமைகளைப் போற்றிப் பாடும் பஜனைப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

அச்சன் கோவில் அரசே ஹரிஹர சுதனே பஜனை பாடல்..

சுவாமியே சரணம் ஐயா தர்ம சாஸ்தாவே வரணும் ஐயா நின் பாதமலர் அடி பணிந்தோம் உந்தன் தரிசனம் தரணும் ஐயா

அச்சன் கோவில் அரசே ஹரிஹர சுதனே(2) ஆரியங்கா ஐயனே சரணம் சரணம்

குளத்தூர் பாலா சர்வ குணசீலா(2) குறை பொறுப்பாயே சரணம் சரணம்

எரிமேலி சாஸ்தா வாவரின் தோழா(2) வில்லாளி வீரனே சரணம் சரணம்

பம்பையின் பாலா பந்தள ராஜா(2) பாவ வினை தீர்ப்பாய் சரணம் சரணம்

சபரிகிரீசா சாந்த சொரூபா நெய்யபி சேகரே சரணம் சரணம்

காந்தமலை ஜோதியே காருண்ய மூர்த்தியே(2) கற்பூர ஜோதியே சரணம் சரணம்

சுவாமியே சரணம் ஐயா தர்ம சாஸ்தாவே வரணும் ஐயா நின் பாதமலர் அடி பணிந்தோம் உந்தன் தரிசனம் தரணும் ஐயா

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →