சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் பஜனை பாடல்

Rosappu Nanthavaname Tamil Lyrics

ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் — சபரிமலை தங்க மணிகண்டனை மலர் நந்தவனத்துக் குழந்தையாய்ப் பாவித்துத் தாலாட்டும் இனிய பஜனைப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் பஜனை பாடல்...

ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா மடிமேல் கண்வளராய் ஐயப்பன் புலிப்பால் கொடுக்கும் ஐயா

சபரிமலை சுவாமி சபரிமலை சுவாமி கண் திறந்து பார்த்துப்புட்டா சிரிச்சா முத்துதிரும் சிந்திச்சா வாழ்வுயரும்

ரோசாப்பூ  ... ரோசாப்பூ ... ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா

என் ஐயா பொன் ஐயா ராசா என் ஐயா  பொன் ஐயப்ப ராசா என் ஐயா பொன் ஐயா ராசா என் ஐயா  பொன் ஐயப்ப ராசா

அகரத்தில் தொடங்கியே அனைத்தயும் கத்துக்கிட்டு பக்தியும் தெரிஞ்சுக்கிட்டு பகவானை வழிபடைய்யா

ஐயன் படி பதினெட்டும் உன் வாழ்வில் ஏற்றம் தரும் அருள்பொங்கும் பார்வை பட்டால் பெருஞ்செல்வம் பெருகிடுமே

உன்னை பெத்தவர்கள் மகிழ்ந்திட மத்தவரும் வாழ்த்திடவே என் கண்ணான கண்மணியே ஐயப்பனை நினை தினமே

சபரிமலை சுவாமி ..... சபரிமலை சாமி கண் திறந்து பார்த்துப்புட்டா சிரிச்சா முத்துதிரும் சிந்திச்சா வாழ்வுயரும்

ரோசாப்பூ  ..... ரோசாப்பூ ..... ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் கோகில இசைகுயில்தான் உனக்கு தாலாட்டு பாடுதய்யா என் ஐயா பொன் ஐயா ராசாவே என் ஐயா  பொன் ஐயப்ப ராசா என் ஐயா பொன் ஐயா ராசாவே என் ஐயா  பொன் ஐயப்ப ராசா

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →