சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணம் பஜனை பாடல்

Ayyappa saranam endre lyrics in tamil

ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணம் — சரணாகதித் தத்துவத்தின் ஆழத்தை உணர்த்தி, ஐயப்பனின் திருநாமத்தை நெஞ்சாரப் பாடும் இனிய தமிழ் பஜனை.

தமிழ் பாடல் வரிகள்

ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணம் பஜனை பாடல்..

ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணம் தர்மசாஸ்தாவே சரணம் என்றே ஆனந்தமாய் பாடிடுவோம்

பம்பாநதி கரையினிலே பக்குவமாய் நீராடி பதினெட்டு படியேறி பக்தியுடன் கூப்பிடுவோம்(Chorus )

தங்கநிற திருமேனி தாங்கி நிற்கும் சாஸ்தாவே(2) தலைமீது கைகூப்பி தன்மயமாய் வணங்கிடுவோம்(Chorus )

காந்தமலை ஜோதி என்றும் கற்பூர ஜோதி என்றும் (2) கலியுகத்து கண்கண்ட தெய்வமென்று கூப்பிடுவோம்(Chorus)

ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணம் தர்மசாஸ்தாவே சரணம் என்றே ஆனந்தமாய் பாடிடுவோம்(Chorus )

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →