சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா பாடல் வரிகள்

Ennai Enna Panna Solgirai Ayyappa Lyrics in Tamil

என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா — இறைவனின் திருவுளத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் சரணாகதிப் பஜனைப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா பாடல் வரிகள்..

என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா எந்தன் உள்ளம் உன்னை நாடுதே ஐயப்பா எந்த நாளும் உன்னை துணையாய் ஐயப்பா என் நெஞ்சம் உன்னை கொண்டதே ஐயப்பா

ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..

கஷ்டங்களை இஷ்டம்போல தருகிறாய் எட்டி நின்று, வேடிக்கையும் பார்க்கிறாய் எத்தனை நாள் இந்த நிலை பார்க்கிறேன் உன்னை என்றும் விடமாட்டேன் ஐயப்பா

என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா எந்தன் உள்ளம் உன்னை நாடுதே ஐயப்பா

ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..

குற்றம் பல செய்து விட்டேன் ஐயப்பா நான் சற்று என்னை பொறுத்திடாய் ஐயப்பா உற்றார் என்னை கேலி செய்ய வைத்திடாய் உற்ற துணையாய் என்னை காத்திடாய்

என்னை என்ன பண்ண சொல்கிறாய் ஐயப்பா எந்தன் உள்ளம் உன்னை நாடுதே ஐயப்பா

ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. ஐயப்பா.. சரணம் ஐயப்பா..

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →