சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்கவா பாடல் வரிகள்

Achankovil Arase Lyrics in Tamil

அச்சன்கோவில் அரசே என் அச்சம் தீர்க்கவா — வாழ்வின் அச்சங்களையும் தடைகளையும் தகர்த்து ஆனந்தம் தரும் அச்சன்கோவில் ஐயப்பனை வேண்டும் பக்திப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்கவா பாடல் வரிகள்..

சுவாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா

அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்கவா பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா இச்சைகொண்டேன் உந்தன் முன்னே ஈசுவரன் மைந்தா பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா

ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா பார்வதியால் அகமகிழும் பாலகனே வா எருமேலி வீற்றிருக்கும் இறைவனே நீ வா தர்மஞான சாசுதாவே தயவுடனே வா

சுவாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா

மலைமேடு சபரிமலை மன்னவனே வா குறைதீர்க்கும் குளத்துப்புழை பாலனே நீ வா மன்னவனே மணிகண்டனே மகிழ்வுடனே வா வன்புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா

சுவாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா

தேவர்களும் உனைப்பணிய காந்த மலையிலே நீ ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே காவலனே கண்ணாரக் கண்டோமே ஜோதி தனை நாவார உனை அழைத்தோம் சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா சுவாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →