சுவாமியே சரணம் ஐயப்பா! | அருள்மிகு பொன்னம்பல ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் • செங்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம்
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

விழி கிடைக்குமா பாடல் வரிகள்

Vizhi kidaikkuma abaya karam kidaikkuma lyrics in tamil

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா — ஐயப்பனின் அருட்பார்வையும் அபயகரமும் தமக்குக் கிடைக்குமா என்று ஏங்கும் பக்தனின் உருக்கமான பிரார்த்தனைப் பாடல்.

தமிழ் பாடல் வரிகள்

விழி கிடைக்குமா பாடல் வரிகள்

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா(2)

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா(2) நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் உனக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்(2) நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா..

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..

சுவாமியே சரணம் ஐயப்பா!

தொடர்புடைய பக்திப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனை

அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார் எங்குமே இருப்பார் பஜனை பாடல்

Angum Iruppar Ingum Iruppar Engume Iruppar Ayyappan Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →
ஸ்ரீ ஐயப்பன் பஜனை

பம்பா நதிக்கரையில் அன்புருவம் உன்னை கண்டு பஜனை துதி

Pamba Nadhikarayil Lyrics In Tamil

பாடல் வரிகளைக் காண →